பாக்தாத் முதல் கோராசான் வரை தாக்குதல் தொடரும் என ஐ.எஸ். அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஷியா முஸ்லிம்களுக்கு எதிராக ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘ஷியா முஸ்லிம்கள் எங்கும் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
பாக்தாத் முதல் கோராசான் வரை இந்தத் தாக்குதல் தொடரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆப்கானிஸ்தானில் உள்ள ஷியா முஸ்லிம்கள் தாக்குதலுக்கு உள்ளாவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து ஐ.எஸ். அமைப்பின் தாக்குதல்கள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய வாரங்களில் அங்கு நிகழ்த்தப்பட்ட இரு தற்கொலைப்படை தாக்குதல்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது