பஸில் ராஜபக்சவை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச , மஹிந்தவுக்கு எதிராகவே தேர்தலில் போட்டியிட்டவர். எனவே, அவரின் அரசியல் ஆட்டத்துக்கு முடிவு கட்டாவிட்டால் நாமல் ராஜபக்சவுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது எனவும் அவர் கூறினார்.
அத்துடன், ” இரட்டை குடியுரிமைக் கொண்ட பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதற்கு நாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டோம். புதிய அரசமைப்பு ஊடாக இதற்கான ஏற்பாடு செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்த நிலையில், அந்த உறுதிமொழி மீறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பஸில் ராஜபக்ச ஒரு சூழ்ச்சிக்காரர் என்றும், அவர் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுபவர் எனவும் விமல் கூறினார்.
அதோடு காமினி திஸாநாயக்க காலத்தில் மஹிந்தவுக்கு எதிராக தங்காலையில் போட்டியிட்டவர் அவர். 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரியபோது, அதற்கு மஹிந்த ராஜபக்ச உடன்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே பஸில் சொல்வதை கேட்டப்படி, நாமல் ராஜபக்ச மௌனம் காத்தால், அவருக்கான அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்விடும் எனதெரிவித்த விமல் வீரவங்க்ச, பஸில் ராஜபக்சவை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.