பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதற்காக கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவரை பாதுகாப்பு அமைச்சு நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்னவினால் ல் வெளியிடப்பட்டுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த அந்தோனி எமில் லக்ஷ்மி காந்தன் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முருகேசு ஸ்ரீ சண்முகராஜா ஆகிய இருவரும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கடந்த 2014 ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்ததற்காக முதல் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.