போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பதில் கல்வி அமைச்சராக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளதால் பந்துல குணவர்தன ஜனாதிபதியால் பதில் கல்வி அமைச்சராக நியமிக்கப்ட்டார்.
அதேவேளை போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன 2005 ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கல்வி அமைச்சராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.