பதுளை சிறையில் மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஐந்து கைதிகள் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.