ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) ஆகியோரை தவிர ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த ஏனையோர் தாம் வகித்து வரும் அனைத்து அமைச்சு பதவிகளிலும் இருந்தும் விலக திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது.
இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு, அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்தின் பிரதானிகள் திட்டமிட்டுள்ளதாக பேசப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, (Basil Rajapaksa) நீர்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ, (Chamal rajapaksa) விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (Namal rajapaksa) ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபகக்ஷ (Shasheendra Rajapaksa) ஆகியோர் தமது பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இது சம்பந்தமான இறுதி முடிவு இன்று மாலை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன காரணமாக ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்ப்பு உருவாகியுள்ளது.
ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும் என போராட்டங்களில் கலந்துக்கொள்ளும் மக்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

