பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபலமானவர் தான் லாஸ்லியா மரிய நேசன். இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்றே பிக்பாஷ் ஷோவில் கலந்து கொண்டார்.
தனது தமிழ் பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்த இவர் இந்த நிகழ்ச்சியில் கவனுடன் காதலில் விழுந்து சர்ச்சையில் சிக்கினார்.
இருப்பினும் தனது குடும்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கவினுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டார். தந்தை மறைவிற்கு பிறகு மீண்டும் படங்களில் நடித்து ஒருசில படங்களும் வெளியானது.
ஆனால் அவரின் நடிப்பு எதிர்ப்பார்த்த படி இல்லாமல் இருந்ததால் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறார். வாய்ப்பிற்காக உடல் எடையை குறைக்க கடின உடற்பயிற்சியும் செய்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வரும் லாஸ்லியா கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.