தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு-1கப்
வெங்காயம்-1
பச்சை மிளகாய்-3
தனி மிளகாய் தூள்-1/2 ஸ்பூன்
இடித்த பூண்டு-10 பல்
பெருங்காயத்தூள்-சிறிதளவு
கோதுமை மாவு-1 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு-1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி-சிறிதளவு
கருவேப்பிலை-சிறிதளவு
உப்பு-ருசிக்கேற்ப
எண்ணெய்-தேவையான அளவு
*செய்முறை* :
ஒரு பாத்திரத்தில், பச்சரிசி மாவு,கோதுமை மாவு, கடலை மாவு, வெங்காயம் பச்சை மிளகாய்,தனி மிளகாய் தூள் பெருங்காயம்,உப்பு,இடித்த பூண்டு, கொத்துமல்லி, கருவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்கு அடை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்பு சிறுசிறு அடையாக வார்த்து தவாவில் சேர்த்து தேவையான அளவு எண்ணெய் விட்டு நன்கு வேகும் வரை சுட்டு எடுக்க வேண்டும்… இப்போது பச்சரிசி மாவு அடை தயார்…👍🏼🤤