நெல்சன் முன்பு விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் படம் அதிகம் ட்ரோல்களை சந்தித்த நிலையில் தற்போது அவர் சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கி இருக்கும் ஜெயிலர் படம் நல்ல ரெஸ்பான்ஸ் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இது நெல்சனுக்கு பெரிய கம்பேக் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
ரஜினியிடம் கதை சொல்ல சொல்லி அனுப்பியதே விஜய் தான் என நெல்சன் ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜெயிலர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் நடிகர் விஜய் நெல்சனுக்கு போன் செய்து பேசி இருக்கிறார். ஜெயிலர் படம் வெற்றி பெற்றதற்கு விஜய் நெல்சனுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறாராம்.
ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டிருக்கும் நிலையில் விஜய் இப்படி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.