அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், நாடு முழுவதும் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
இந்த நிலையில் , நாட்டு மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அமரபுர ராமன்ன மகா நிகாய பீடாதிபதிகளினால் கையொப்பமிடப்பட்ட விசேட கடிதமொன்று அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தக் கடிதத்தில் மல்வத்து பீடத்தின் பொதுத் தலைவர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன அஸ்கிரி பீடத்தின் பொதுத் தலைவர் தொடம்பஹல ஸ்ரீ சந்திரசிறி அமரபுர மற்றும் மஹா விலா ஸ்ரீலங்கா ராமன்ன நிகாய மகாநாயக்க தேரர் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.