இந்தியா நிறுவனம் ஒன்றின் ஊடாக ஒரு தொகை நெனோ நைட்ரஜன் திரவ உரத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ததன் ஊடாக அரசாங்கத்தின் பணம் முறைகேடாக பயன்டுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி இன்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
குறித்த கொடுக்கல் வாங்கல் எவ்வித வௌிப்படைத்தன்மையும் இல்லாமல் இடம்பெற்றதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் மெட்ரிக் டொன் நெனோ நைட்ரஜன் திரவ உரம் எடுத்து வரப்படுவதாக குறிப்பிடப்பட்ட போதிலும் 25,000 மெட்ரிக் தொன் மாத்திரமே விமான நிலையத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவசரமாக இறக்குமதி செய்ய வேண்டுமாயின் குறைந்தபட்சம் அமைச்சரவை அனுமதியையேனும் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.