எல்பிட்டிய பிரதான வீதியில் எல்பிட்டிய நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் மிதி பலகையில் இருந்து பாடசாலை மாணவர் ஒருவர் தவறி விழுந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இன்று (14) காலை பாடசாலை ஆரம்பிக்கும் முன்னர் குறித்த பேருந்து எல்பிட்டிய டிப்போவுக்கு அருகில் வேகமாக பயணித்துள்ளது.
இதன்போது பேருந்தின் மிதி பலகையில் பயணம் செய்த குறித்த மாணவர் திடீரென தவறி தரையில் விழுந்துள்ளார்.
விபத்தில் குறித்த மாணவருக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் எல்பிட்டிய ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது .
மேலும் இந்த சம்பவத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.