எதிர்வரும் ஜூலை மாதம் ஆறாம் திகதி வரை சமையல் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்ள பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் விடுத்துள்ளார்.
ஜூலை 5ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரண்டு கப்பல்களில் 7, 000 மெட்ரிக் டன் எரிவாயு நாட்டை வந்தடையும்.
அந்த கப்பல்களில் உள்ள எரிவாயு கிடைக்கும் வரை கையிருப்பில் தற்போது எரிவாயு இல்லை.
அத்துடன் அடுத்த மாதம் 10 ஆம் திகதியின் பின்னர், 25,000 மெட்ரிக் டன் எரிவாயு தாங்கிய பாரியதொரு கப்பல் மாலைத்தீவு கடற்பகுதியை அண்மிக்கவுள்ளது.
அங்கிருந்து சிறு கப்பல்கள் ஊடாக தொடர்ச்சியாக எரிவாயுவை நாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் ஐந்தாம் திகதியின் பின்னர், நாளாந்தம் 12.5 கிலோகிராம் நிறைக் கொண்ட 80,000 சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.