நியூயோர்க் மற்றும் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்தார்.
அதன்படி, இன்று காலை 09.30 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி நாட்டை விட்டுப் புறப்பட்டார்.
அதைத் தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி, செப்டம்பர் 27 ஆம் திகதி காலை ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளிவிகார அமைச்சின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.