மனமும் உடலும் ஓய்வெடுக்கும் இடத்தில் எந்தவிட இடைஞ்சலும் இருக்கக்கூடாது அப்படி இருந்தால் உறக்கம் தடைபடும். எனவே நாம் ஓய்வெடுக்கும் படுக்கும் அறையை வாஸ்து படி அமைக்க வேண்டும்.
நம் அனைவருக்கும் தூக்கம் மிகவும் முக்கியமானது. ஒருவர் நல்ல நிம்மதியான தூக்கத்தை மேற்கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
முக்கியமாக உறங்கும் அறை அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்க வேண்டியது அவசியம்.
தூக்கம் மனிதனுக்கு எப்படி அவசியமோ, அதேபோல் எந்த திசையில் தலை வைத்து தூங்குகிறோம், எந்த நிலையில் தூங்குகிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
எந்த நிலையில் தூங்குகிறோம் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். நாம் எப்படி ஒரு வீட்டை வாங்கும் போது வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்று பார்க்கிறோமோ, அது போல நாம் தூங்கும் திசையையும் சரியான திசையில் இருக்க வேண்டும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தவறான திசையில் தலை வைத்து தூங்கினால் உடல் நலம் பாதிக்கும். அதோடு சரியான நிலையில் தூங்குவதன் மூலம், உடல்நலத்திற்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் நல்லது. கிழக்கு திசையில் தலை வைத்து தூங்கும் போது, இந்த திசையில் இருந்து வரும் நேர்மறை ஆற்றல்கள் உடலுக்கு அனைத்து வகையான நேர்மறை ஆற்றலையும் வழங்கும்.
முக்கியமாக இந்த திசையில் தூங்கினால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதோடு, மறுநாள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் நடமாடலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
தெற்கு திசையில் தலை வைத்து வடக்கு திசை நோக்கி கால்களை நீட்டி தூங்கினால், புகழ், செல்வம், வெற்றி தேடி வரும் உடல் ஆரோக்கியமும் மேம்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
மேற்கு திசையில் தலை வைத்து தூங்கினால், பணக்காரர்களாகவும், பெயர் புகழுடன் வாழ்வதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.
வடக்கு திசையில் தலை வைத்து உறங்கக்கூடாது. ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தெற்கு திசையில் கால்களை நீட்டித் தூங்கினால், உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
நாம் உறங்கும் போது கதவை நோக்கி கால்கள் இருக்கக் கூடாது. இதனால் நல்ல சக்தி கால்வழியாக வெளியேறி கதவு வழியே சென்று விடுவதால் சோம்பல் அதிகரிக்கும்.
படுக்கை அறை சுவரில் கத்தி, சண்டையிடும் போர்வீரன், ஆடு, மாடு, மான் தலைகள், புலி, சிங்க உருவங்களின் படங்களை வைக்கக்கூடாது.
காதலை / அன்பை தூண்டும் ஓவியங்கள், படங்கள் இடம் பெறுவது நல்லது.ஜோடியான பறவைகள், பீனிக்ஸ் பறவைகள், டிராகன், மீன்கள், இரட்டை வாத்துக்கள், ஹம்மிங் பறவைகளின் ஓவியங்களை மாட்டி வைக்கலாம்.
படுக்கை அறை பெயிண்ட் இளம் வண்ணங்களில் இருப்பது சிறப்பு. இளம் நீளம், பிங்க், இளம் மஞ்சள் நிறத்தில் வர்ணம் பூசுவது சிறப்பு.
அதே போல படுக்கை அறையின் சீலிங் வெண்மை நிறத்தில் இருப்பது சிறப்பு.இரவு நேர விளக்கு சிவப்பு நிறத்திலோ இளம் ஊதா நிறத்திலோ சிறப்பு.
காதல் ஓவியங்கள், ரதி மன்மதன் சிலையை படுக்கை அறையில் தென்மேற்கு மூலையில் வைப்பது மனதிற்கு இதம் தரும். உறக்கமும் நிம்மதியாக இருக்கும்.