விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்கவும் தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுண ரணதுங்கவும் கொழும்பிலிருந்து கண்டிக்கு ரயிலில் விஜயம் செய்துள்ளனர்.
கண்டி- பள்ளேகல மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மத்திய மாகாண விளையாட்டு அதிகாரிகள் மற்றும் முகாமைத்துவ அதிகாரிகளை தெளிவுப்படுத்தும் நிகழ்வுக்காக அவர்கள் இவ்வாரு சென்றுள்ளனர்.
இந்நிலையில் அரசாங்கத்தின் நிதி செலவைக் கட்டுப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அமையவும் விளையாட்டுதுறை அமைச்சின் செலவுகளைக் குறைக்கும் நோக்குடன் இருவரும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர்.