எந்த சூழ்நிலையிலும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச அமைச்சரவையிலிருந்து நீக்கப்படமாட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சர்கள் இருவர் பசில் ராஜபக்ச நாட்டுக்கு தீமை ஏற்படுத்தக்கூடிய ஒருவர் என்றும், அவர் வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றார் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ,அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் நிதியமைச்சருக்கு எதிராக பிரச்சாரம் குறித்து ஐலண்ட் பிரதமரிடம் கேள்வி எழுப்பியபோதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன் அமைச்சர்களை நியமிப்பதற்கான நீக்குவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரம் உள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தனிப்பட்ட விவகாரங்கள் காரணமாகவே நிதியமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக தெரிவித்த பிரதமர், நிதியமைச்சருக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான ஒத்துழைப்பை வழங்கவேண்டு;ம் எனவும் கூறினார்.

