உலகம்முழுவதும் கொரோனா பரவலை கட்டப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் கொரோனாவின் 2 வது அலை வேகமாக தற்பொழுது பரவி வருகிறது.
குறிப்பாக வடமாநிலங்களில் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம்.றிப்பாக கேரளா மற்றும் மராட்டியத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மராட்டிய மாநிலத்தை தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் போபால் மற்றும் இந்தூர் நகரங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் உள்ளது. இதனையடுத்து அந்த இரு நகரங்களிலும் இரவு நேர ஊரடங்கு விரைவில் அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபால் மற்றும் இந்தூரில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.