நிதி அமைச்சர் அலி சப்ரி, நாடாளுமன்றத்தில் நாளை விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
நாடாளுமன்றம் நாளை முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
அதன்படி அமைச்சுகளுக்கான அறிவிப்புவேளையின்போது, சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சு, அதன்மூலம் ஏற்பட்டுள்ள சாதக பெறுபேறு மற்றும் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக நிதிaமைச்சர் சபைக்கு தெளிவுபடுத்தவுள்ளார்.