நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார்.தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.
இதை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முக்கியக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவரும் நிலையில், சிறிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.அந்த வகையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில், தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார்.
ஆனால், இந்தக் கட்சிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.இதை தொடர்ந்து தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக அவர் களம் காணுகிறார்.பலம் வாய்ந்த அதிமுக அமைச்சர் வேலுமணி மற்றும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி ஆகியோரை எதிர்த்துப் போட்டியிடும் மன்சூர் அலிகான் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.