நான் ராஜ குடும்பத்தை விட்டு விலகவேயில்லை என்று கூறியுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி, ஒரு கணவனாக, ஒரு தந்தையாக நான் என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் செய்தேன் என்று கூறியுள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக, டபுள் டெக்கர் பேருந்து ஒன்றில் அமர்ந்து பேட்டி ஒன்றை அளித்த இளவரசர் ஹரி இந்த விடயத்தைத் தெரிவித்தார்.
நான் தற்காலிகமாக என் பங்களிப்பை நிறுத்தினேனேயொழிய, நான் ராஜ குடும்பத்தை விட்டு விலகவில்லை என்றார் ஹரி.நாங்கள் ராஜ குடும்ப மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகக் காரணம், லண்டனில் வாழ்வதால் ஏற்பட்ட அழுத்தம், என் மன நலனை பாதித்தது என்பதால்தான் என்றார் அவர்.
நாங்கள் ராஜ குடும்பத்தைவிட்டு விலகவில்லை, அது ஒரு மிகக்கடினமான சூழல், ஆகவே, ஒரு கணவனாக, ஒரு தந்தையாக நான் என்ன செய்யவேண்டுமோ அதைத்தான் நான் செய்தேன் என்று கூறியுள்ளார் ஹரி.அங்கிருந்து என் குடும்பத்தை எப்படி வெளியே கொண்டு வருவது என்றுதான் நான் நினைத்தேன். என்னைப் பொருத்தவரை, நாங்கள் ஒருபோதும் ராஜகுடும்பத்திலிருந்து விலகவில்லை, மற்ற ராஜ குடும்ப உறுப்பினர்கள் என்ன நினைத்தாலும் சரி, நான் ஒருபோதும் ராஜ குடும்பத்தை விட்டு விலகமாட்டேன் என்று கூறியுள்ளார் ஹரி.
ஆனால், இந்த பேட்டி ஹரி மேகனின் பட்டங்களை மகாரணியார் பறிப்பதற்கு முன் எடுக்கப்பட்ட பேட்டி என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே பாட்டியாருக்கு பேரன் ஹரி மீது அதிக பாசம் உண்டு, இந்த பேட்டி வெளியானபின் அவர் என்ன முடிவெடுக்கப்போகிறாரோ தெரியவில்லை!