வளர்ந்து வரும் இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் இருக்கும் அதுல்யா ரவி சமீபத்திய பேட்டியில் முதல் முதலில் பார்த்த பிட்டு படம் இதுதான் என குறிப்பிட்டுள்ளது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.வரவர யூடியூப் பேட்டிகள் என்றாலே 18+ போர்டு வைத்து விடவேண்டும் போல. அந்த அளவுக்கு ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதையே ஒரு பிரமோஷனாக நினைத்துக்கொண்டு அதற்கும் பதிலளிக்கும் பிரபலங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது சர்ச்சையில் மாட்டியுள்ளவர் தான் இளம் நடிகை அதுல்யா ரவி. கோவையில் பிறந்த அதுல்யா ரவி தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நாயகியாக வலம் வருகிறார். வருங்காலத்தில் மிகப் பெரிய நடிகையாக வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
அந்தளவுக்கு சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்தவகையில் அடுத்ததாக அதுல்யா ரவி சாந்தனு நடிப்பில் முருங்கக்காய் சிப்ஸ் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ஏதோ சொல்ல பாடல் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதுல்யா ரவியிடம் சமீபத்தில் யூடியூப் தொகுப்பாளர் ஒருவர் முதன் முதலில் பார்த்த பிட்டு படம் என்ன? என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அதுல்யா அது பிட்டு படமா என்று சொல்லத் தெரியவில்லை, ஆனால் கல்லூரி படிக்கும்போது வகுப்பில் ஆஷிக் பானா என்ற ஹிந்தி பாடல் பார்த்ததுதான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
செம ரொமான்டிக் பாடலான அதை தன்னுடைய பெண் தோழிகள் அனைவருடனும் சேர்ந்து நடு வகுப்பில் உட்கார்ந்து பார்த்தாராம். அதை கண்டுபிடித்த உடன் படிக்கும் ஆண் தோழர்கள் பின்னர் கிண்டலடித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.