தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் தளபதி விஜய்.
இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு இளைஞர், பெரியவர்கள் எனப் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுகிறது. தற்போது விஜய் லியோ படத்தை அடுத்து இயக்குனர் வெங்கட் பிரபு படத்தில் நடிக்கவுள்ளார்.
நெட்பிளிக்ஸ் தலத்தில் Never I Have Ever என்ற வெப் தொடருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதில் ஹீரோயினாக மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்திருப்பார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், நான் விஜய் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி படத்தை பார்த்த பின்பு தான் சினிமாவில் நடிக்க ஆசை வந்தது என்று கூறியுள்ளார்.

