மக்கள் வாக்குகள் மூலம் அதிகாரத்தைப் பெற முடியாத சதிகாரர்களின் கூட்டமே மக்களை வீதிக்கு இறக்கி நாட்டை பின்னோக்கி திருப்ப முயல்கிறார்கள் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இத்தருணத்தில் கட்சி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டுக்காக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆறு வருடங்களை முன்னிட்டு பத்தரமுல்லை, நெலும்வத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று (2) இரவு முழுவதும் நடைபெற்ற பிரித் ஓதும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது, கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பிரச்சினைகள் தற்போது ஒவ்வொன்றாக தீர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால் நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்து வருகிறது. இந்த நாடு அழிந்து கொண்டிருக்கும் வரை பார்த்துக் கொண்டிருக்கும் கூடத்திற்கு இவற்றை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது நாட்டைப் பின்னோக்கித் தள்ள வேண்டும் என்று அந்தக் கூட்டம் முயற்சிக்கிறது.
மக்களைக் குழப்பி வீதிக்கு அழைத்துச் சென்றால் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கது. ஆனால் சில அரசியல் கட்சிகள் மக்களை அடைத்து வைக்கும் செயல்களை செய்கிறார்கள். நாட்டைப் பொறுப்பேற்கச் சொன்னால், அதற்கு அவர்கள் பயப்படுகிறார்கள். இந்த போராட்டங்களால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது. கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினையை எங்கள் எவராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்கள் வாக்குகளில் வெற்றி பெறாத ஒரு குழு அந்த பொது அழுத்தத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியது. அந்த கும்பல் இன்றும் மக்களை குழப்பி வீதிக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த தருணத்தில் கட்சி அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டை பற்றி சிந்திக்க வேண்டும். இப்போது செய்ய வேண்டியது நாடு வீழ்ந்த இடத்தில் இருந்து மீள உறுதுணையாக இருக்க வேண்டும். அது போல கால்களை மாட்டிக் கொண்டு முன்னோக்கி நகர்வதை நிறுத்துவது அல்ல.
போராளிகள் என்று கூறிக்கொள்ளும் அந்த சதிகாரர்கள் மே 9 ஆம் திகதி எமது வீடுகளுக்கு தீ வைத்த போது எமது அரசியல் பயணமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பயணமும் முடிந்து விட்டதாக நினைத்தார்கள். வீடுகளை எரித்தும் சேற்றை வீசியும் எங்கள் அரசியலை நிறுத்த முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வீழாது மாற்றாக வலுவடையும் ஒரு அரசியல் கட்சியாகும்.அந்த எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.