ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
முன்னணி தொழிலதிபர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழு ஒன்றே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் ரமேஷ் பத்திரன, இந்த ஆலோசனைக் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி மேற்படி ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் பின்வருமாறு,
1. பேராசிரியர் எச்.டி. கருணாரத்ன
2. பேராசிரியர் ஷிரந்த ஹீன்கெந்த
3. தம்மிக்க பெரேரா
4. கிருஷன் பாலேந்திரன்
5. அஷ்ரோஃப் உமர்
6. கலாநிதி துஷ்னி வீரகோன்
7. கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய
8. விஷ் கோவிந்தசாமி
9. எஸ்.ரெங்கநாதன்
10. ரஞ்சித் பக்கம்
11. சுரேஷ் டி மெல்
12. துமிந்த ஹுலங்கமுவ
13. சுஜீவ முதலிகே
14. பிரபாஷ் சுபசிங்க ஆகியோரே இவ்வாறு ஜனாதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்

