நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து தான் இந்த சவாலுக்கு முகங்கொடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றி பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
கடந்த வரவு செலவு திட்டத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான அரச வருவாய் 2,300 பில்லியன் ரூபாய்களாக கணிப்பிடப்பட்டிருந்ததாகவும் ஆனால் தபோதைய கணிப்பு 1,600 பில்லியன் ரூபாய் எனவும் பிரதமர் கூறினார்.
2022 ஆம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவு 3300 ரூபாய்கள் என வரவு செலவு திட்டத்தில் கணிப்பிடப்பட்டது. எவ்வாறாயினும், கடந்த அரசாங்கத்தின் வட்டி வீதம் குறைப்பு மற்றும் மேலதிக செலவுகள் அதிகரித்ததன் காரணமாக மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவு 4 பில்லியன் ரூபாய்களாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அத்துடன் வருடத்திற்கான வரவு செலவு திட்ட பற்றாக்குறை 2400 பில்லியன் ரூபாய்களாகும். அது மொத்த தேசிய உற்பத்தில் 13 சதவீதமாகும். அதேபோல் அனுமதிக்கப்பட்ட கடன் எல்லை 3200 பில்லியன் ரூபாய்களாகும் என கூறிய பிரதமர் ரணில், நாம் மே மாதம் இரண்டாம் வார காலப்பகுதிக்குள் 1950 பில்லியன் ரூபாய்களை செலவிட்டுள்ளோம். அதன்படி, தற்போது உள்ள மொத்த மீதி 1250 பில்லியன் ரூபாய்களாகும் எனவும் கூறினார்.