நாட்டில் நிலவும் வங்குரோத்து நிலைமையால் வறுமை அதிகரித்துள்ளதாகவும், பெற்றோர்களால் தமது பிள்ளைகளுக்குத் தேவையான புத்தகங்களையும் கூட வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தமது நாளாந்த உணவுத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மூவேளை சாப்பிட்டவர்கள் தற்போது இரு வேளையும், இரு வேளை சாப்பிட்டவர்கள் தற்போது ஒரு வேளை சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இந்நிலையில் நாடாக எம்மால் முன்னோக்கி செல்ல முடியாது எனவும், நாட்டில் திருப்புணை ஒன்று தேவை எனவும் ,அது கல்வித்துறையில் ஏற்படும் மறுசீரமைப்பு சார்ந்த திருப்புமுணையாக இருக்க வேண்டும் எனவும், தற்போது நடைமுறையிலுள்ள கல்விக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் எனவும், இதனூடாக நாட்டை முதல் நிலைக்கு கொண்டுவரும் வேலைத்திட்டம் உடனே ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
´பிரபஞ்சம்’ வேலைத்திட்டத்தின் கீழ் 63 ஆவது கட்டமாக ஐம்பது இலட்சம் (5,000,000) ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து வண்டியொன்று கோட்டை, ஆனந்த மகளிர் கல்லூரிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் நேற்று (05) அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.