நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன எதிர்வரும் 09 ஆம் மற்றும் 10 ஆம் திகதிகளில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வர்த்தகத்திற்காக இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.