நாளாந்த மின்வெட்டு காரணமாக நாட்டில் பல கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநர்கள் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றதாக சுட்டிக்காட்டப்படுள்ளது.
நாட்டில் அமுல்படுத்தப்படும் நீண்ட கால மின் தடை அவர்களின் 3G மற்றும் 4G பரிமாற்ற நெட்வேர்க் அமைப்புகளை சீர்குலைத்துள்ளது.
அதேவேளை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜெனரேட்டர்களின் செயற்பாடும் பாதிக்கப் பட்டுள்ளதாக விஷேட அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
மேலும் மின்சாரம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை யால், இணையத்தள வசதிகள் வழங்குவதும் சிக்கலில் உள்ளது.