நாட்டிற்குத் தேவையான அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் உரிவாயு என்பவற்றை இறக்குமதி செய்ய பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போதுமான டொலர் இருப்பு இன்மை மேலும் தொடர்ந்த வண்ணம் இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர், டெய்லி மிரர் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக வருகின்ற மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள்கூட அதிகரிக்க நேரிடும் என்பதோடு தட்டுப்பாடும் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.