நாடு இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
டீசல் மற்றும் பெட்ரோல் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், சாலையில் எப்போது, எங்கு வாகனங்கள் நிற்கும் என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.
துறைமுகத்தில் சிக்கியிருந்த டீசல் கப்பல் நிதிப் பற்றாக்குறையால் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், துறைமுகத்தில் உள்ள பெட்ரோல் டேங்கருக்கு இன்னும் டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, நாட்டில் மின்வெட்டு தொடரும் என குறிப்பிட்ட ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று நாடு ஸ்தம்பித நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்