நாட்டில் மீண்டும் ஒரு கொரோனா அலை ஏற்பட்டால் அதற்கான மொத்த பொறுப்பையும் எதிர்க்கட்சி தான் ஏற்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அயல் நாடுகளில் அணைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கொரோனவிலிருந்து தங்கள் நாடுகளை பாதுகாக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் இங்கு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்துடன் இணையானது கொரோனாவை ஒழிப்பதை தவிர்த்து மாறாக அதனை பரப்பி அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்து வருகின்றனர்.
மேலும் எதிர்க்கட்சியினர் மேலும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி மற்றொரு அலைக்கு வழிவகுத்தால் அதற்கு முழு பொறுப்பையும் எதிர்க்கட்சியை ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.