நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை முறையாக கடைபிடித்து பொறுப்புடன் நடந்துகொள்ளாவிட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை உருவாகும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
இலங்கையில் தற்போது தினசரி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 600 ஐ தாண்டியுள்ளது. இதனை சாதாரணமாக கருதிவிட முடியாது.
இன்னும் ஒரு வாரத்துக்கு பின்னரே இதன் தாக்கம் தெரியவரும். சுகாதார நடைமுறைகளையும், வழிகாட்டல்களையும் முறையாக பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் மீண்டும் நாட்டை முடக்க நேரிடலாம். பாடசாலைகள் மூடப்படலாம், வணிக செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.