நாட்டில் உள்ள அரச நிறுவனமொன்றின் முன்னாள் தலைவர் ஒருவர் தான் பதவி வகித்த காலத்தில், அவர் கலந்து கொண்ட விழாக்களுக்கு இசை வழங்குவதற்காக 15 பேரை வைத்திருந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அதிகாரியால் நியமிக்கப்பட்ட அந்த இசைக்குழுவிற்கு சம்பளம் வழங்கியுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு இசைக்குழுவை பயிற்றுவிப்பதற்காக பயிற்சியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு அவருக்கும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் தலைவர் சமீபத்தில் வேறொரு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் அவர் நியமித்த இசைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர் தொடர்ந்து நிறுவனத்தில் தங்கி அவர்களின் சம்பளத்தைப் பெறுவார்கள் என்று அறியப்படுகிறது.
அதேவேளை , அந்தஅதிகாரியின் பாதுகாப்பிற்காக அரசு செலவில் ஆறு தனிப்பட்ட மெய்க்காப்பாளர்களை நியமித்துள்ளதாகவும் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

