இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து இன்று அல்லது நாளை தீர்மானம் எட்டப்படும் சாத்தியம் உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி ,அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நாட்டில் நாளாந்தம் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து, இந்த தீர்மானம் எட்டப்படும் என அவர் கூறினார்.
இதேவேளை, பிரதேச ரீதியில் பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.மேலும் ,கொவிட்−19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்துடன் இணைந்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் அரசியல் தலையீடுகள் கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.