24 நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தினால் கடந்த (09.02.2024) ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் குழுக்களில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஸ நேற்று சபையில் சமர்ப்பித்துள்ளார்.
இதற்கமைய, ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களாக பவித்ராதேவி வன்னியாரச்சி, விஜேதாச ராஜபக்ஸ, விஜித பேருகொட, தாரக்க பாலசூரிய, அநுராத ஜயரத்ன உள்ளிட்டோரும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களாக மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, லசந்த அழகியவண்ண, பிரசன்ன ரணவீர, K. காதர் மஸ்தான், டயனா கமகே, சாமர சம்பத் தசநாயக்க, வஜிர அபேவர்தன, A.L.M. அதாவுல்லா உள்ளிட்டோரும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களாக ஜகத் புஷ்பகுமார, ஜானக வக்கும்புர,லொஹான் ரத்வத்தே, இந்திக அனுருத்த ஹேரத், சதாசிவம் வியாழேந்திரன், அருணாச்சலம் அரவிந்த குமார், மருதபாண்டி ராமேஷ்வரன் உள்ளிட்டோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.