நாடாளுமன்ற திறப்பு விழாவில் முதன்முறையாக ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என முன்னாள் இராணுவ வீரர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கொடி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி என்ற பட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரம்மசிங்க கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்திருப்பதால், இந்த நிகழ்வில் ஜனாதிபதி கொடி ஏற்றப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விழாவில் தேசியக் கொடி மட்டுமே ஏற்றப்படும் என்றும் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதேவேளை பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நாடாளுமன்றம், ஆகஸ்ட் மூன்றாம் திகதி ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.