பொதுஜன முன்னணியின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கொழும்பில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தை அடுத்து அவரும் அவருக்கு நெருக்கமானவர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று பிசிஆர் பரிசோனையும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.