நாட்டை ஆளும் அரச தலைமைகள் பொது மக்கள் நாளாந்தம் படும் சுமைகளை அறியாதவர்களாக, அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு எட்டத் தவறியவர்களாக சுகபோகமாக வாழ்வது மக்களை மேலும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது.
இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில், எரிபொருள் வரிசை, எரிவாயு வரிசை, சைக்கிள் வரிசை, அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கான வரிசை என நாளுக்கு நாள் மக்களின் வரிசைகள் எல்லைகள் கடந்து செல்கின்றன.
சர்வதேச அளவில் வழங்கப்படுகின்ற நிதியும், நன்கொடைகளும் மக்களுக்கு உரிய முறையில் சென்று அடைவதில்லை, அரச தலைமைகளே அவற்றை போட்டிபோட்டு பங்கு கொள்வதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இலங்கையில் நீண்டு செல்லும் வரிசைகளில். பசி, பட்டினி, உறக்கம், குடும்பம் என்பவற்றை தொலைத்தவர்கள் இன்று உயிரையும் தொலைத்துச் செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நேற்று, இன்று, நாளை என தினமும் வரிசை மரணங்கள் உச்சம் காண்கின்றன.
புதிதாய் பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர் வரையில், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் என அடிப்படைத் துறைகள் கூட ஒழுக்கின்றி காணப்படுவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இலங்கையில் தொடரும் ‘கோ கோம் கோட்டா’ முதல் வரிசைகளில் குமுறும் ‘கோட்டா அழிஞ்சு போவான்’ வரையில் எவற்றையும் காது கொடுக்காதவர்களாக கோட்டா ஆட்சி தொடர்கின்றது.
அத்துடன், தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சக்களுக்கு, தற்போதுள்ள சூழலில் நாட்டு மக்களின் வேதனை புரியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
அதன்படி இன்றைய தினம், கண்டி புகையிரதமொன்றில் மக்கள் பயணிக்கும் காட்சியும், நாடாளுமன்ற அமர்வில் கோட்டாபய – ரணில் சிரித்து மகிழும் காட்சியும் மக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
எனவே, இவற்றை எல்லாம் நோக்கும் போது நமது நாட்டின் ஜனாதிபதி பார்வையற்றவராக இருக்க வேண்டும் அல்லது மக்கள் பற்றி கவலைப்படாதவராக இருக்க வேண்டும் என மக்களால் விசனம் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.