நாடாளுமன்றில் லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) எதிரணியினரை நோக்கி கூச்சலிட்டதுடன் கெட்டவார்த்தையை பயன்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் இடம்பெற்ற காரசாரமான விவாதத்திலேயே இவ்வாறு இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று (09) செவ்வாய்கிழமை உர விவகாரம் தொடர்பாக எதிர்கட்சியினருடன் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த லொஹான் ரத்வத்த எதிரணியினரை நோக்கி கூச்சலிட்டதுடன் கெட்டவார்த்தையை பயன்படுத்தியிருந்தார்.
இதன்போது, அருகில் இருந்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, (Mahindananda Aluthgamage) ரத்வத்தவின் தலையில் கைகளை வைத்து அவரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.
இருப்பினும், கோபத்தில் மீண்டும் மீண்டும் கடும் சொற்பிரயோகங்களை மேற்கொள்ள இராஜாங்க அமைச்சரைக் கட்டுப்படுத்த மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) பல முயற்சிகளை மேற்கொண்டார்.
இதேவேளை லொஹான் ரத்வத்த (Lohan Ratwatte) சிறைச்சாலையில் கைதிகளை மண்டியிடவைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.