இன்று நாடளாவிய ரீதியில் அரச துறை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளன.
இந்த போராட்டமானது ‘தேசிய கறுப்பு போராட்டம்’ என இது அழைக்கப்படுகின்றது.
இந்நிலையில் மக்களின் குரலுக்கு செவிசாய்த்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலக கோரியே இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தொழிற்சங்க சம்மேளன உறுப்பினர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.