நாசா நான்கு பேரை செயற்கை செவ்வாய்க்கு ஒரு வருட கால பயணத்திற்கு அனுப்பியது. அவர்கள் 1 வருட பயணத்தை முடித்து வெளியேறின.
ஒரு மருத்துவ அதிகாரி, பணி நிபுணர் மற்றும் இரண்டு பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்ட குழுவினர், தங்கள் பணியின் போது பல சவால்களை எதிர்கொண்டதாக கூறினர்.
நாசாவின் லட்சிய க்ரூ ஹெல்த் அண்ட் பெர்ஃபார்மென்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் அனலாக் (CHAPEA) பணியானது, ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் ஸ்பேஸ் சென்டரில் உள்ள 1,700 சதுர அடி 3D-அச்சிடப்பட்ட செவ்வாய் கிரகத்தில் பணியில் இருந்தனர் அவர்கள் சமீபத்தில் இந்த ஒரு வருட பயண திட்டத்தை முடித்து வெளியேறின.
அவர்கள் அங்கு வாழ்ந்த காலத்தில், குழுவினர் விவசாயம் செய்வது, உணவு தயாரித்தல், உடற்பயிற்சி, பராமரிப்புப் பணிகள் மற்றும் அறிவியல் சோதனைகள் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் நாசாவின் லட்சியத் திட்டத்திற்கு தயாராகும் வகையில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இது ரெட் பிளானட்டிற்கான நீண்ட கால பயணங்களின் போது விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளக்கூடிய உடல் மற்றும் உளவியல் சவால்கள் குறித்த முக்கியமான தரவுகளை வழங்குகிறது.
செவ்வாய் கிரகத்தைப் போல அப்படியே உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மூலம் மனித ஆரோக்கியம் மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதேயே முதன்மை குறிக்கோளாக கொண்டுள்ளது.
378 நாட்கள் குழுவினர் இதில் தங்கியிருந்தபோது, பல சவால்களை எதிர்கொண்டதாக கூறினர். “மார்ஸ்வாக்ஸ்”, பூமியுடனான தொடர்பு தாமதங்கள், உபகரணங்கள் தோல்விகள் மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்கள் ஆகியவை இதில் சோதனை செய்யப்பட்டது என்று நாசா கூறியது.