இந்தியாவில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் விடு தீப்பிடித்தால் தாயும் மகளும் உயிரோடு எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் இந்த கோரா சம்பவம் நடந்துள்ளது
சத்ரூ பகுதியில் உள்ள Manzagam-Tagood கிராமத்தில் ஒரு குடிசை வீட்டிற்குள் அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட போது, அதில் போஷா தேவி (50) மற்றும் அவரது மகள் நீது பாலா (25) ஆகியோர் சிக்கியதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
அந்த வீடு முற்றிலுமாக எரிந்து சாம்பலானது வீட்டிலிருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் எப்படியோ தப்பித்து வெளியேறியுள்ளனர்
அவர்கள், தூங்கிக் கொண்டிருந்த போஷா தேவி மற்றும் நீது பாலாவை காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்தும் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என கூறியுள்ளனர்
பின்னர், பொலிஸ், தீயணைப்பு மற்றும் அவசர சேவைப் பணியாளர்கள் அடங்கிய மீட்புக் குழு தீயை முற்றிலுமாக அனணத்து, அவர்களது எரிந்த உடல்களை மீட்டனர்
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர் தாயும் மகளும் உயிரோடு தீயிக்கு இரையான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது