யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் பொறுப்பற்ற வகையில் பல ஆண்டுகளாக அனைத்து கழிவுகளும் கொட்டப்பட்டு வரும் இணுவில், காரைக்கால் குப்பை மேடு நேற்றையதினம் திடீரென பற்றியெரிந்தது.
யாழில் தீயணைப்பு வண்டி இயங்குநிலையில் இல்லாமையால் உடனடியாக தீயை அணைக்க முடியாததால் தீ தொடரந்து எரிந்தது. இரவு-10 மணியைத் தாண்டியும் தீ பற்றியெரிந்த நிலையில் பிரதேச மக்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் நல்லூர் பிரதேச சபையின் பொறுப்பற்ற செயல் தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

