வரலாற்று பிரசித்திபெற்ற அலங்கார கந்தனாம் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுமி ஆலயத்தில் இன்று காலை தீர்த்தோற்சமப் இடம்பெற்றது.
பக்தர்கள் சூழ வலம்வந்த முருகப்பெருமான் தன்னை நாடிவந்தவர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சப பெருவிழாவில் கலந்துகொள்வதற்காக பெருமளவு புலம்பெயர் தமிழர்களும் நாட்டுக்கு வருகை தந்திருந்தனர்.
கடந்த 25 நாட்களாக நால்லூரானின் மகோற்சப பெருவிழ இடம்பெற்ற நிலையில் இன்று தீர்தோற்சம்பாகும். இதன்போது ஸ்ரீ ஷண்முக புஷ்கரணியில் ஆனந்த குதூகல தீர்த்தமாடி, ஸ்வர்ண வாஹன சேவையுடன் பஞ்சவர்ணாலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தமை கண்கொள்ளா காட்சியாக அமைந்திருந்தது.
தொடர்ந்து இன்று மாலை கொடி இறக்க திருவிழாவுடன் நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா இனிதே நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.