இந்தியாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட திருமணமான பெண்ணின் சடலத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.பஞ்சாப் மாநிலத்தின் கானா கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்பல் சிங். இவர் மனைவி சரஞ்சித் கவுர் (40).
இவர் கடந்த 13ஆம் திகதி காணாமல் போனார். இது குறித்த புகாரின் பேரில் பொலிசார் கவுரை தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று கவுரின் சடலம் அதே கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.அவரின் தலையின் மேல் பகுதி மற்றும் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் அருகில் கூரான ஆயுதமும், கவுரின் உடைகள் கிடந்தன.
இது குறித்து கவுரின் கொழுந்தன் குர்தீப் கூறுகையில், சுக்விந்தர் என்பவர் தன்னை ஒரு சாமியார் என கூறி கவுரிடம் அறிமுகமானார்.பின்னர் அவரின் நம்பிக்கையை பெற்று அடிக்கடி வீட்டுக்கு வர தொடங்கினார்.இந்த நிலையில் கவுர் மார்ச் 13ஆம் திகதி மாயமானார், அப்போது எங்களிடம் வந்த சுக்விந்தர், கவுர் குறித்த தகவல் சில நாட்களில் உங்களுக்கு வரும் என கூறினார்.
இதனால் அவர் தான் கவுரை கொலை செய்திருக்கக்கூடும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.