வெளிநாட்டில் வசிக்கும் இந்தியருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பணம் பரிசாக விழுந்துள்ளது.கர்நாடக மாநிலத்தின் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்தவர் சிவமூர்த்தி கிருஷ்ணப்பா. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பிக் டிக்கெட் லொட்டரியை கிருஷ்ணப்பா வாங்கி வந்தார்.
நமக்கு பெரிய அதிஷ்டம் அடிக்காதா என நினைத்திருந்தவருக்கு தற்போது அதிர்ஷ்டம் அடித்துள்ளது. அதன்படி லொட்டரியில் ரூ 24 கோடியை அள்ளியுள்ளார் கிருஷ்ணப்பா.அவர் கூறுகையில், என் சொந்த ஊரில் குடும்பத்தாருக்காக பெரிய வீடு கட்ட வேண்டும் என்பதே என் விருப்பம். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.அவர்களின் வருங்காலத்திற்காக பணத்தை சேமித்து வைப்பேன்.எனக்கு பரிசு விழுந்தது என்பதை முதலில் நம்பவில்லை, பின்னரே நம்பினேன் என கூறியுள்ளார்.