நன்றி நவிலல்
யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவா சிவலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.அன்னாரின் 41ம்நாள் நினைவு தினத்தின் நினைவாக 05-11-2022 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Shivan Temple, Industriestrasse 34, 8152 Opfikon, Switzerland எனும் முகவரியில் மதியபோசன நிகழ்வு நடைபெறும்.
இவ்வண்ணம் உற்றார்,உறவினர்,நண்பர்கள்,அனைவரையும் மதியபோசன நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சியாந்தினி – மனைவி:0041 783205499
சோபனா – மைத்துனி:0041 787527881