புதுச்சேரியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போஸ்கோ சட்டத்தின் கீழ் லாரி டிரைவரைபோலிசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். தற்போது, 45 வயதான இவர் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார். ஜாகீர் உசேன், புதுச்சேரிலுள்ள தன் நண்பர் வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம். அப்போது , நண்பரின் 11 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனார், பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோரிடம் அழுதபடியே கூறியுள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர்கள் குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து , ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டிரைவர் ஜாகீர் உசேனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
