அமெரிக்காவில் பயணிகள் விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்து அதன் பாகங்கள் நகரம் முழுவதும் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Denver விமான நிலையத்திலிருந்து 231 பயணிகள் மற்றும் 10 விமானக்குழு உறுப்பினர்களுடன் Honolulu புறப்பட்ட united 328 விமானமே நடுவானில் தீப்பற்றி எரிந்துள்ளது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலே வலது புற இன்ஜின் தீப்பற்றி எரிந்துள்ளது. இன்ஜினிலிருந்து சிதறிய பாகங்கள் Broomfield பகுதியில் உள்ள குடியிருப்புகள் மேல் விழுந்துள்ளது.
இதனையடுத்து, விமானம் அவசரமாக Denver விமான நிலையத்திலே பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்திலிருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என விமான நிறுவனம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணிகள் Honolulu பயணிக்க மாற்று விமானம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.அதேசமயம் விபத்திற்கான காரணம் குறித்து அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துறை விசாரணை முன்னெடுத்துள்ளது.
விமான பாகங்கள் குடியிருப்பில் விழுந்து கிடக்கும் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். மேலும், வீடுகள் உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், யாரும் பாதிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.நடுவானில் விமானத்தின் இடது புற இன்ஜின் தீப்பற்றி எரிந்ததை பயணிகளில் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.